பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
Shruthi sanmuga Priya engagement
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இதில் கண்ணம்மாவாக ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துவந்தார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில், ரோஷினி ஹரிப்ரியனுக்கு வெள்ளித்திரையில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி சமீபத்தில் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார். இத்தகைய நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை பிரபல மாடல் அழகி வினுஷா தேவி ரிப்லேஸ் செய்து வருகின்றார்.
இந்த சீரியலில் ஏற்கனவே நடித்து வந்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. சமீபகாலமாக இவரது கதாபாத்திரம் சீரியலில் காண்பிக்கப்படும் இருந்து வருகிறது. இத்தகைய நிலையில் தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Shruthi sanmuga Priya engagement