46 வயதிலும், இளமை மாறாத சிம்ரன்.. 90'S-களின் கனவுக்கன்னியின் சமீபத்திய புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் 90 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் நிறைய வெற்றிப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது.

2000 ஆண்டு இறுதியில் அவர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன் பின்னர்,  படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது சிம்ரன் சில படங்களில் நடித்து வருகிறார். 

அடுத்ததாக அவரது நடிப்பில், ஆரியாவின் கேப்டன் படம் வெளியாகவுள்ளது. படங்களில் கதாநாயகியாக சிம்ரன் நடிக்கவில்லை என்றாலும் கூட திரையில் நாயகிகளின் என்ட்ரியை விடவும், சிம்ரன் எண்ட்ரியின் போது ரசிகர்களின் ஆரவாரம் பலமாக இருப்பதை காண இயலும். ரசிகர்களின் கன்வுக்கன்னி என்ற புகழுக்கு இப்போதும் சிம்ரன் தகுதியானவர் என்று கூறினால் அது மிகையாகாது.

இந்த நிலையில், சிம்ரன் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் கலந்து கொண்ட சிம்ரனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இப்பொழுதும் கூட தனது 46 வயதில் நடிகை சிம்ரன் மிகவும் இளமையாக இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simran latest Click In black and white dress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->