இந்த நடிகை யாருன்னு தெரியுதா.?! எவர்க்ரீன் நடிகையின் விண்டேஜ் புகைப்படம் வைரல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவில் என்றென்றும் இருக்கும் கதாநாயகிகளில் முதலிடத்தில் இருப்பவர் என்றால் அது சிம்ரன் தான். தளபதி விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பஞ்சாபி புயல் சிம்ரன், ரஜினி கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து  90களில் இறுதியிலும் 2000ங்களில்  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்.

2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட சிம்ரனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சில காலம் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த இவர்  பேட்ட திரைப்படத்தின் மூலம் மறுபடியும்  ரீ-எண்ட்ரி கொடுத்தார். தற்போது புதிய திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் சிம்ரன்.

மகான் திரைப்படத்திலும் ராக்கெட்ரி என்ற இணையதள தொடரிலும் நடித்திருந்த இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் பிரசாந்த் நடிக்கும் அந்தகன்  ஆகிய திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஐ.எம்.டி.பி இணையதளம் கூட  இந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்கள் பட்டியலில் சிம்ரனுக்கு ஆறாவது இடத்தை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை  சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் சிம்ரன் தற்போது தான் குழந்தையாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். க்யூட்டான புன்னகையுடன் சிம்ரன் இருக்கும் அந்த குழந்தை பருவ புகைப்படத்தை ரசிகர்கள் லைக் செய்து வைரல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simran shared her childhood  photo went viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->