கர்நாடக இசையரசியை கானா பாடல் பாட வைத்த அஜித் பட பாடலாசிரியர்.!
singer sudha ragunathan sing gana song
கர்நாடக இசையரசியை கானா பாடல் பாட வைத்த அஜித் பட பாடலாசிரியர்.!
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் ‘போட்- நெய்தல் கதை’ என்று கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தை மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘வலிமை’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படம் முழுக்க முழுக்க கடலிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தில் கானா பாடல் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/sudha ragunathan 1-82rz9.png)
இந்தப் பாடலை கர்நாடக இசையரசி பத்மபூஷன் - சுதா ரகுநாதன் பாடினால் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளரும் இயக்குநரும் விரும்பி அதன் படி சுதா ரகுநாதனை அணுகியுள்ளனர். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அவருக்காக பட குழுவினர் மூன்று மாதம் காத்திருந்து அவர் சென்னை திரும்பியதும் பாடல் பதிவை நடத்தியுள்ளனர். இந்தப் ‘போட்’ திரைப்படத்தை வருகிற நவம்பர் மாதம் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
English Summary
singer sudha ragunathan sing gana song