பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்.. புதுச்சேரி கவர்னர்,முதலமைச்சர் ரங்கசாமி திடீர் முடிவு!
Plans to meet PM Modi Puducherry Governor, Chief Minister Rangasamy
சிறப்பு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடியை கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரிக்கு நேற்று வருகைதந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி முருகன் மத்திய நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்கி பேசினார்.
இதேபோல இதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி முருகன் புதுச்சேரி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ.க. மாநிலத்தலைவர் செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோரைச் சந்தித்து புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரிக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க தயாராக இருப்பது குறித்து மத்திய இணை மந்திரி முருகன் கூறினார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி பெற பிரதமர் மோடியை சந்திக்க மார்ச் மாதம் டெல்லி செல்ல திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தார்.அப்போது இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் மாநில வளர்ச்சி தொடர்பாக பிரதமரை வந்து சந்திக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி முருகனும் கேட்டுக் கொண்டார்.இந்தநிலையில் இதனைத்தொடர்ந்து இணை மந்திரி முருகன்ராஜ் நிவாஸ் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கவர்னர் கைலாஷ்நாதனும் வருகிற மார்ச் மாதம் பிரதமரை சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் புதுச்சேரிக்கு அளித்த வாக்குறுதிகள் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆளும் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.அந்தவகையில் சிறப்பு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பிரதமரை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சந்திப்பார்கள் என தகவல் கூறப்படுகிறது.
English Summary
Plans to meet PM Modi Puducherry Governor, Chief Minister Rangasamy