சிக்ஸ் பேக்குடன் ''எஸ்கே 21''! ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு! - Seithipunal
Seithipunal


மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'மாவீரன்'. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்த படம் சுமார் 90 கோடி அளவில் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 21 வது படம் கமலஹாசன் தயாரிப்பில், சாய் பல்லவி உடன் நடிக்க உள்ளார். 

சாய் பல்லவி மலையாளத்தில் நடித்த பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றி தான் தற்போது தென்னிந்தியா முழுவதும் அவருக்கு நல்ல பெயர் உள்ளது. 
 
இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அந்தப் படங்களுக்கு தயாரிப்பு நிறுவனம், காப்புரிமை கோரி நீக்கிவிட்டதாக ட்விட்டரில் சினிமா டிரேட் அனலிஸ்ட் ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு, மாவீரன் இசை வெளியீட்டு விழா மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அவருக்கு நல்ல உடல் கட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

எனவே 'எஸ்கே 21' படத்தில் சிவகார்த்திகேயன் புதிய தோற்றம் நிச்சயம் என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். 

காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் சிக்ஸ் பேக் புகைப்படம் ஆகஸ்ட் 15ஆம் நாள் அன்று அதிகாரப்பூர்வமாக வெளி வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivakarthikeyan 21 movie with six pack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->