'படத்திற்காக தான் நான் நடித்தேன்... உங்கள் வாழ்க்கையில் தயவு செய்து புகை பிடிக்காதீர்கள்'...!!! - நடிகர் சூர்யா
acted for film Please dont smoke Actor Suriya
பிரபல தமிழ் திரையுலக முன்னணி நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் 'கார்த்திக் சுப்பராஜ்' இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

மேலும், இப்படத்திற்கு இசையை 'சந்தோஷ் நாராயணன்' இசையமைத்திருக்கிறார்.இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
மேலும் இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ரெட்ரோ படக்குழுவினர் படத்தின் புரமோஷனுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, 'புகைப்பிடிக்க வேண்டாம்' என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா:
அதாவது அவர் முழுமையாக தெரிவித்ததாவது,"படத்திற்காக மட்டுமே 'ரெட்ரோ'வில் நான் சிகரெட் பிடித்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் தயவுசெய்து புகைபிடிக்காதீர்கள்.
ஒரு முறை தானே என ஆரம்பித்தால் கூட அதை விட முடியாது. உங்களை அது அடிமையாக்கிவிடும். புகைப்பழக்கத்தை என்றுமே நான் ஆதரிக்க மாட்டேன். இது என் வேண்டுகோள்" என்று தெரிவித்துள்ளார்.இதற்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
acted for film Please dont smoke Actor Suriya