அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் யார் தெரியுமா?
next actor to act Sudha Kongaras direction
இயக்குனர் சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' படங்கள் மூலம் தமிழ் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்தவர்.அதுமட்டுமின்றி பெண் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக விளங்குபவர்.

இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து 'பராசக்தி' படத்தை இயக்குகிறார். இதில், ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.
இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க பிரபல இசையமைப்பாளர் 'ஜிவி பிரகாஷ்' இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 'வேட்டை நாய்' என்ற நாவலை திரைப்படமாக உருவாக்கவுள்ளார் 'சுதா கொங்கரா'. அதில் கதாநாயகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
English Summary
next actor to act Sudha Kongaras direction