நல்ல குடும்பக் கதையாக இருந்ததால் சம்மதித்தேன்...! ஆனால் அவருடன் நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!- சிம்ரன்
I felt lucky to act with him Simran
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் 'சிம்ரன்'.இவர் தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். இவர் சமீபத்தில் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

நடிகர் சசிகுமாருடன் சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இப்படம் வருகிற 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிம்ரன்:
அதுமட்டுமின்றி, டூரிஸ்ட் பேமிலி படத்திற்கான புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிற நிலையில் நடிகை சிம்ரன் சசிகுமாருடன் ஜோடியாக நடித்தது குறித்து தெரிவித்ததாவது, "நல்ல குடும்பக் கதையாக இருந்ததால் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடிக்க உடனடியாக சம்மதித்தேன். அதுமட்டுமல்ல அதற்கு இன்னொரு காரணமும் உண்டு அதற்கு முக்கிய காரணம் சசிகுமார் தான்.
மிகப்பெரிய இயக்குனரும் நடிகருமான அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமைதான். அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான் என நினைக்கிறேன்.
சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் இருக்க கூடாது. திறமைக்கு முதலிடம் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.இந்தக் கருத்து தற்போது ரசிகர்கள் பலரால் கவரப்பட்டு வருகிறது.
English Summary
I felt lucky to act with him Simran