பொன்முடி, செந்தில் பாலாஜியின் பெயர்கள் அமைச்சர்கள் இருக்கையில் நீக்கம்...! ஏன்?
Ponmudi and Senthil Balajis names removed from cabinet
இன்று தமிழக சட்டசபை காலை 9:30 மணிக்கு கூட்டம் கூடியது. இதில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதனால், அமைச்சரவை முதல் வரிசையிலிருந்து பொன்முடி பெயரும், 2-வது வரிசையிலிருந்து செந்தில் பாலாஜி பெயரும் நீக்கப்பட்டுள்ளது.
இதில் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள 'மனோ தங்கராஜ்' இன்று மாலை அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.அதன் பிறகே, அமைச்சர்கள் இருக்கை வரிசையில் அவரது பெயர் இடம்பெறும் என அறிவித்துள்ளன.
இதில் நாளை நிறைவு நாள் சட்டசபை கூட்டத்தின்போது, அமைச்சர்கள் வரிசையில் மனோ தங்கராஜ் இடம்பெறுவார்.
ஆனால் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவரும் 3-வது வரிசையான முன்னாள் அமைச்சர்கள் இருக்கையில் அமருவார்கள் என அறிவித்துள்ளன.
English Summary
Ponmudi and Senthil Balajis names removed from cabinet