பிரின்ஸ் படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்.? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!
Sivakarthikeyan about Prince movie telugu
திரைத்துறையில் கடுமையான உழைப்புக்கும், வலிக்கும் உள்ளாகி வந்த நடிகரில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவா என்றும் சிவகார்த்தி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் சிவாவுக்கு விஜய் தொலைக்காட்சி கொடுத்த அங்கீகாரத்தால் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகிவிட்டார்.
மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தொடங்கி இன்று டாக்டர் படம் வரை என பல படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், திரைப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார். அவரது முதல் தயாரிப்பு படமான கனா பலரின் கவனத்தை பெற்று பெரும் பாராட்டுகளை அள்ளித்தந்தது.
சமீபத்தில் இவரது நடிப்பில், டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்ததாக, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடிக்கின்றார். சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தகைய நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' படத்திற்காக முதல் முறையாக தெலுங்கு மொழியில் டப்பிங் பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாக மற்றும் தெளிவாக பேசும் நுட்பங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Sivakarthikeyan about Prince movie telugu