தேசிய விருதை பெற்ற, "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்." படம் குறித்த ஒரு பார்வை.!
sivaranjaniyum innum sila penkalum movie story
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களுக்கு மத்திய அரசு திரைப்பட கலைஞர்களை பாராட்டி கௌரவித்து விருதுகளை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கும், அந்த துறையின் சிறந்த விருதுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகிறது. இதில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 21 வரை சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக, 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது ஒரு ஆந்தாலாஜி திரைப்படம். இது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியது.
ஆணாதிக்க மனநிலையில் இருக்கும் நபர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும் பெண்களின் கதைதான் இந்த திரைப்படம். உணவுக்கே வழி இல்லாத போதும் ஒரு கணவன் தனது மனைவியிடம் எப்படி தனது ஆதிக்கத்தை காட்டுகிறான் என்பது சரஸ்வதி என்ற பெண்ணின் கதையாக காட்டப்பட்டிருக்கும்.
தொடர்ந்து திருமணத்திற்குமுன் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த சிவரஞ்சனி திருமணத்திற்கு பின் தனது கனவுகளை தொலைத்து ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக மாறி தன் வாழ்வில் இழந்ததை நினைத்து வருந்துவதாக காட்டப்பட்டிருக்கும்.
மேலும், குடும்ப அரசியலால், தனது மன உணர்வுகளை மதிக்காத கணவரால், குடும்பத்தை பிரிந்து ஹாஸ்டலில் வாழும் பெண்ணின் சுயமரியாதை குறித்து காட்டப்பட்டிருக்கும்
இதில் பல்வேறு கேள்விகள் மனதை துளைத்தாலும், இவை அனைத்திற்கும் இயக்குனர் சரியான வகையில் காட்சிகளிலேயே பதில் கூற முயற்சித்திருப்பார். பெண்களின் துயரங்களை இது இயல்பாக எடுத்துக்காட்டி இருக்கும்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் வசந்த் எஸ்.சாய் இயக்கியுள்ளார். இதில் கருணாகரன், காளீஸ்வரன் , லட்சுமி பிரியா, பார்வதி திரிவோதி, லிசி ஆண்டனி, சுந்தர் ராமு, கார்த்தி கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
English Summary
sivaranjaniyum innum sila penkalum movie story