சிவகார்த்திகேயனின் எஸ்.கே-25 படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் - வெளியானது புது அப்டேட்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். 

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தில் ஜெயம் ரவி, நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இன்று சென்னையில் 'எஸ்கே 25' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sk 25 movie shooting start update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->