அஸ்வினுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய தயாரிப்பாளர்.! பாவம்யா விட்டுருங்க.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடம் பிரபலமடைந்தவர் தான் அஸ்வின். இவர் நிறைய ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 

இவரது முதல் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். இதன் மூலம் அஸ்வின் ஹீரோவாக வெள்ளித்திரையில் களமிறங்குகிறார். அவரது முதல் படமான என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அஸ்வின் ஆர்வக்கோளாறில் ஓவராக பில்டப் கொடுத்து பேசி பலரையும் எரிச்சலூட்டினார்.

முதல் படத்திலேயே இவ்வளவு திமிராக பேசுகிறார் என்றும் அவரை கலாய்த்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வின் நான் ஆர்வக்கோளாறில் பதற்றத்தில் இப்படி எல்லாம் பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். ஆனாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. 

தற்போது பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமாவில் நடக்கின்ற பல நிகழ்ச்சிகள் திரைக்கதைகளை விட சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும். பலரது வாழ்வையும் புரட்டிப் போடும். அது மிகவும் பர்சனல். அனுபவம் இன்மையால் அஸ்வின் செய்த தவறை பெருந்தன்மையுடன் கடந்து செல்வோம். அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sr prabu support to Ashwin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->