இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியானதா? முக்கிய தகவல் - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மொத்தம் 6 கொடியே 36 லட்சம்  வாக்காளர்கள் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. அதன்படி 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் அக்டோபர் 18ம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி  அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6 கோடி  36 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். 3 கோடியே 11 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சம் பெண் வாக்காளர்களும், 9,120 முன்றாம்  பாலின வாக்காளர்களும் இருகின்றனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில், 1 லட்சத்து 76 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ம் தேதி முதல் புதிய வாக்காள்ர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new voters list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->