ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை'; ஸ்ருதிஹாசன் குரலில் Its Breakup da பாடல் வெளியானது..!
its Breakup da has been released
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இப்படத்தின் 03வது பாடலான 'பிரேக் அப் டா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இப்பாடலை சிநேகன் எழுத, சுருதி ஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே இணைந்து பாடியுள்ளனர்.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'என்னை இழுக்குதடி' கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடி இருந்தனர்.
இப்படத்தின் 02வது பாடலான 'லாவெண்டர் நேரமே' பாடலை அலெக்ஸாண்ட்ரா ஜாய் மற்றும் ஆதித்யா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.
இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
English Summary
its Breakup da has been released