விஷால், லாரன்ஸ், நாணியுடன் போராட்டம்.. ஏமாத்திட்டாங்க.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி மூன்று வருடங்களுக்கு முன் ஹைதராபாத் சாலை ஒன்றில் அரைகுறையாக உடை அணிந்து போராட்டம் நடத்தினார். இதில் நடிகர்கள் விஷால், லாரன்ஸ், நாணி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இவர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீ ரெட்டி பேசிய போது, "பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்துச் சென்று தன்னை ஏமாற்றி விட்டனர். 

சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் என்று ஃபோட்டோ ஷூட் எடுப்பதாக அழைத்து ஆடையை கழட்ட சொல்லி என்னை முழுமையாக பார்த்துவிட்டு போட்டோ சூட் வேண்டாம் என்று கூறிவிட்டு கிளம்பி விடுவார்கள். இது போல பலரும் தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். 

அதை எல்லாம் நான் ஏற்றுக் கொண்ட பின்னர் கூட எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் பயன்படுத்திய எனது உடலை தான் நான் வெளியில் காட்டி நியாயம் கேட்டேன். 

என்னை அவர்கள் ஏமாற்றியது சரி. ஆனால், நான் போராடியது மட்டும் தவறு? இது எப்படி நியாயம்? எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்தினேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri nithi about her half naked protest


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->