மரண அப்டேட் கொடுத்த எஸ்.டி.ஆர். 48 படக்குழு.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரான சிம்பு, சமீபத்தில் பத்து தல படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சிம்பு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடித்து வருகிறார். 

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 

இந்த ஆண்டு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே இ்ந்தப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், 'எஸ்.டி.ஆர். 48' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதாவது, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

str 48 movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->