மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் சுப்ரமணியபுரம் திரைப்படம்.. எப்போது தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவை புரட்டி போட்ட திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சசிகுமார் இயக்கி, நடித்த சுப்ரமணியபுரம் திரைப்படம். கடந்த 2008 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

அதன்படி சசிகுமார் இயக்கி, தயாரித்து, நடித்த இந்த திரைப்படத்தில் அவருடன் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, நடிகை சுவாதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து இருந்தார்.

மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் காதல், துரோகம், அரசியல் என அனைத்தையும் விறுவிறுப்பான திரைக்கதையோடு கொண்ட திரைப்படமாக எடுக்கப்பட்டது. இன்றளவும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், அதனை கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி சுப்ரமணியபுரம் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளது. தற்போது இந்த தகவல் ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramaniapuram movie re release on August 4


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->