புஷ்பா வெற்றி படக்குழுவினருக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் உம் சொல்றியா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கேஜிஎப் திரைப்படம் அளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் ஒரு முறை பார்க்கலாம் என்ற ரீதியில்தான் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இந்த நிலையில் புஷ்பா இயக்குனர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sukumar give 1lakh for Pushpa team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->