துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை சன்னி லியோன் உதவி.! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலை சிரியா மற்றும் துருக்கி எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால தற்பொழுது வரை 43,000 பேர் மேல் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது 

துருக்கி மற்றும் சிரியாவில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளை இழந்து நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். உலக நாடுகள் பலவும் அத்தியாவசிய பொருட்களை துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய முடிவு செய்துள்ளதாக பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நடிகை சன்னி லியோன் வெளியிட்ட பதிவில் 'துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக எங்களது கம்பெனியின் பிப்ரவரி மாத வருவாயிலிருந்து 10 சதவீதத்தை வழங்க உள்ளோம். இது போன்ற நேரத்தில் ஒவ்வொருவருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்பது அவசியம். இதன் மூலம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு உதவ முடியும்' என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunny announce to help turkey and syriya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->