தொழிலதிபராக அவதாரம் எடுத்த சன்னி லியோன்!   - Seithipunal
Seithipunal


கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ''வடகறி'' என்ற திரைப்படத்தில் நடித்து சன்னி லியோன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

இதனை தொடர்ந்து மதுர ராஜா, ஓ மை கோஸ்ட், தீஇவன் போன்ற திரைப்படங்களில் சன்னி லியோன் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்தும் வரும் சன்னி லியோன் தற்போது தொழிலதிபராக மாறி உள்ளார். 

உத்தர பிரதேசம், நொய்டாவில் சன்னி புதிய ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். பார் போன்ற வசதிகள் கொண்ட நட்சத்திர ஓட்டலுக்கு ''சிக்கா லோகா'' என பெயர் வைத்துள்ளார். 

விரைவில் இந்த ஹோட்டலின் கிளை இந்தியா முழுவதும் தொடங்க இருப்பதாகவும் சன்னி லியோன் திட்டமிட்டுள்ளார். நடிகைகள் பலரும் நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunny Leone entered business


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->