ரஜினிகாந்த் இன்று 'ஜெயிலர்' படத்தை பார்த்துவிட்டு நாளை இமயமலை பயணம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வது வழக்கம். இதில் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2010ம் ஆண்டுகளுக்கு இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார்.

இதில், கடந்த 2018 ஆம் ஆண்டில் காலா மற்றும் 2.0 படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இன்று படத்தின் முதல் காப்பியை பார்த்து விடுவார் என கூறப்படுகிறது. அதன்பின்னர் இன்று இரவோ அல்லது நாளை காலை அவர் இமயமலைக்கு பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Superstar Rajinikanth trip to Himalayas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->