மரணக்குத்து! நடிகர் சூர்யாவை பங்கமாய் கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யாபேசுகையில், "கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் கங்குவா படம் உருவாகியுள்ளது. 

அக்டோபர் 10ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. அதனால் சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரியாக இருக்கும்.

கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீங்கனு நம்புறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் அக்டோபர் 10ஆம் தேதி கங்குவா ரிலீஸ் ஆகாது என்பது உறுதியாகியுள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் இதனை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து உள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

போட்டி என்று வந்துவிட்டால் தைரியமாக மோத வேண்டும். தள்ளிப்போவதற்கு..கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லக்கூடாது.

2019 பொங்கல் ரிலீஸ். 'பேட்ட',யுடன் மோதி அதிக வசூலை பெற்றது விஸ்வாசம். 

வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா?

'இதே மாதிரி.. கங்குவா 2 கூட  எவனும் மோத பாக்காதீங்க. அந்த டைம்ல ரொம்ப உக்கிரமா இருப்பேன்'

'அது எப்ப ரீலீஸ்? சொல்லிட்டு போடா'

'வாடா.. வாடா.‌. வந்து பாருடா'

தீபாவளிக்கு தள்ளி போகலாம்னு பாத்தா..

'டேய்.. நீ வழக்கமா ஆயுத பூஜைக்குத்தான வருவ? இப்ப ஏன் தீபாவளிக்கு வர்ற? தள்ளிப்போ. எனக்கு எடம் வேணும்'

வருசா வருசம்..பொங்கல், தீபாவளியை நீங்களே புடிச்சிக்கிட்டா.. நான் எப்ப பெரிய பண்டிகை ஸ்டார் ஆகுறது? 

நான் எப்பவோ துண்டு போட்டுட்டேன். லேட்டா வந்துட்டு தகராறு பண்ணாத. இனிமே நான் பொங்கல், தீபாவளி டைம்லதான்டா வருவேன்'
 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Surya Kanguva vettaiyan Blue Sattai Maaran Troll


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->