அர்ஜுன் தாய் இறப்பு.. ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் கன்னட சினிமாக்களில் முன்னணி நடிகராக இருப்பவர் அர்ஜுன். அர்ஜுன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த முதல்வன் மற்றும் ஜென்டில்மேன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. 

அவர் நிறைய ஆக்சன் திரைப்படங்களில் நடிப்பதால் அவருக்கு ஆக்ஷன் கிங் என்று சிறப்பு பெயர் ரசிகர்களால் வைக்கப்பட்டது. அர்ஜுனின் தாய் தேவம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் 85 வயதாகும் நிலையில் இன்று தேவம்மா உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து, "நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல்நலக் குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Chief Minister M. K. Stalin condoled the death of Arjun's mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->