பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதி ராவ் காலமானார்.! - Seithipunal
Seithipunal


பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதி ராவ்(78) இன்று அதிகாலை காலமானார். நகைச்சுவை மற்றும் வில்லன் பாத்திரங்களுக்கு பெயர் பெற்ற மூத்த நடிகர் சலபதி ராவ், 1944 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பலிபர்ரு கிராமத்தில் பிறந்தார்.

இவர் 1966 ஆம் ஆண்டு கிருஷ்ணா மற்றும் ஜெயலலிதா நடித்த குடாச்சாரி 116 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 600க்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருந்ததி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் கலியுக கிருஷ்ணடு, கடப்பா ரெட்டம்மா ஆகிய படங்களை தயாரித்த சலபதி ராவ், இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவு ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telugu actor Chalapathi Rao passed away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->