ஏ.. எப்புட்ரா.? தளபதி விஜயா இது.? பதின்ம வயது புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் அறிமுகமாகி தனது தந்தை 1992 ஆம் ஆண்டு இயக்கிய நாளை தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது நடிப்பு கேரியரில் திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக. அந்தத் திரைப்படத்தின் வெற்றிதான் தளபதியை ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் ஸ்டாராக உருவாக வைத்தது.

தற்போது சூப்பர் ஸ்டாருக்கு இணையாக ரசிகர் பட்டாளங்களை கொண்டிருக்கும் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் மிஸ்கின், திரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

தற்போது நடிகர் நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் கூட ஆண்ட்ரியா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் புகைப்படங்கள்  வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது  தளபதி விஜயின் குழந்தை பருவ புகைப்படம்  இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது.

துறைமுகம் அருகே எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற சட்டை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார் தளபதி விஜய். இன்று இருக்கும் தளபதி விஜய் தானா அது என்று வியக்குமளவிற்கு இருக்கிறது அந்த புகைப்படம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy vijay childhood photo went viral in internet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->