விரைவில் தனி ஒருவன் 2 - மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.!
thani oruvan 2 update
விரைவில் தனி ஒருவன் 2 - மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ’தனி ஒருவன்’. இந்தத் திரைப்படம் வெளிவந்து சுமார் எட்டு வருடங்களைக் கடந்துள்ள நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பாகத்திலும் நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டோர் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படம் குறித்து இயக்குநர் மோகன்ராஜா பேசுகையில், “இந்தப் படம் என் வாழ்வை மாற்றிய ஒரு படம். இது வெளியாகி இன்றுடன் எட்டு வருடங்கள் ஆகிறது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தனி ஒருவன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த ஆதரவு இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். அண்ணாவுடன் இது எனக்கு ஏழாவது படம்.
அண்ணாவுடன் நன்கு வேலைப் பார்த்தால் ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது இந்தப் படம் மூலம் நிரூபனமானது. இந்தப் படத்தை ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர். தனி ஒருவன் படத்தின் முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சி உள்ளது. அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும்” என்றார்.