திரைத்துறை காட்டிற்குள் சிக்கியுள்ளது!... ஹேமா கமிட்டி ஒரு கேம் சேஞ்சராக மாறும்! - நடிகை சம்யுக்தா மேனன்!
The film industry is stuck in the jungle Hema Committee will be a game changer Actress Samyuktha Menon
கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில், பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது மேலும் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சம்யுக்தா மேனன், காட்டில் மாட்டிக் கொண்டு வழிதேடும் நிலையில் தான் தற்போது திரைத்துறை உள்ளதாகவும், இதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சிலர் சுரண்டல்களில் ஈடுபடுவதாக சாடியுள்ளார்.
மேலும், சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர், ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரையுலகில் ஒரு கேம் சேஞ்சராக மாறும் என்று கூறியுள்ளார்.
சம்யுக்தா மேனன், தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை தொடர்ந்து, தனுசுக்கு ஜோடியாக வாத்தி படத்திலும் நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது சுயம்பு படத்தில் நடித்து வருகிறார்.
English Summary
The film industry is stuck in the jungle Hema Committee will be a game changer Actress Samyuktha Menon