நாளை காணும் பொங்கல்; சென்னையில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! - Seithipunal
Seithipunal


தை முதல் நாள், பொங்கல் பண்டிகை நேற்று உலக தமிழர்களால்  கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இன்றைய தினம், விவசாயத்திற்கு பேருதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள்,பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுவார்கள்.

இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

500 special buses to operate in Chennai tomorrow on the occasion of Kanum Pongal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->