தனுஷ் இயக்கத்தில் 3வது படத்தின் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் சிங்கிள் விரைவில்! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 26ம் தேதி ராயன் படம்  வெளியாகி வெற்றி நடை போட்ட நிலையில் ஓ.டி.டி.யிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.

நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில்,இந்த படத்தின் முதல் பாடலுக்கான பைனல் மிக்சிங் முடிவடைதிருக்கிறது. நடிகர் தனுஷ் முதல் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். 

இது குறித்து நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு, கேமியோ ரோலில் நடித்ததற்கு நடிகர் தனுஷ் நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The first single of Dhanush 3rd film Nilavuku En Mel Ennadi Gobam is coming soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->