ஏன்ப்பா.. டிவோர்ஸ்க்குலாம் போட்டோஷூட்டா?! ரொம்ப ஓவராத்தான் போறாங்களோ?! - Seithipunal
Seithipunal


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சூப்பர் மாம் மூலம் புகழ்பெற்றவர் ஷாலினி. தனது மகளுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் இறுதிச்சுற்று வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீரா என்ற தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு குஷ்பூ நடித்திருந்தார். இந்த தொலைக்காட்சி தொடரில் மீராவின் கணவரின் தங்கையாக குஷ்புவிற்கு வில்லியாக நடித்தார் ஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது. சன் குடும்பம் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் கலந்து கொண்டார்.

முதல் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற ஷாலினி ஒரு நடன நிகழ்ச்சிக்காக துபாய் சென்றபோது முஹம்மத் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் இரண்டாவது திருமணமும் அவருக்கு திருப்தியானதாக இல்லை. மதுவிற்கு அடிமையான இவரது இரண்டாவது கணவர் அடித்து துன்புறுத்தி ஷாலினியை மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தனது இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இருக்கிறார் ஷாலினி.

 

அதனைக் கொண்டாடும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர். அது தற்போது ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. பிறந்தநாள், திருமண நாள் என்று கொண்டாடுவது போல விவாகரத்து பெற்ற நாள் என தலைப்பிட்டு இவர் நடத்தி இருக்கும் போட்டோ சூட் சமூக வலைதள வாசிகளிடம் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையிலிருந்து வெளிவந்ததை  வெற்றிகரமாக கொண்டாடி இருக்கிறார் ஷாலினி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The serial actress divorce day celebration photo suite went viral on social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->