இந்தியா - தாய்லாந்து இடையிலான நூற்றாண்டு கால உறவு ஆழமான கலாசாரம், ஆன்மீகத்தோடு தொடர்புடையது; பிரதமர் மோடி..!
The century old relationship between Thailand is related to deep culture and spirituality Prime Minister Modi
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து சென்றுள்ளார். பாங்காக் விமான நிலையத்தில் அவருக்கு தாய்லாந்து இந்திய சமூகத்தினர் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாய்லாந்து அரசு மாளிகையில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாடு கடந்த 2018-இல் நேபாளத்தில் நடைபெற்றது. பிறகு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்திக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச்சில் இலங்கை தலைநகர் கொழும்பில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இந்நிலையில், உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து கடல்சார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். பயணத்தின் முக்கிய அம்சமான பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நாளை காலை கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது பிம்ஸ்டெக் கூட்டமைப்பால் 2030-ஆம் ஆண்டு பாங்காக் லட்சிய பிரகடனம் ஏற்றுகொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கிடையே நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காள தேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனஸ் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்திப்பார் என்று கூறப்படுகிறது.

அத்துடன், நாளை பிரதமர் மோடி, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோரர் மற்றும் அவரது மனைவியையும் மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டு கலைஞர்கள் நிகழ்த்திய அந்நாட்டு தாய்மொழியில் இயற்றப்பட்ட ராமாயணமான ராமாகியனின் நாடகத்தை பிரதமர் மோடி கண்டு ரசித்துள்ளார்.
மேலும் இது தொடர்ப்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- இந்தியா - தாய்லாந்து இடையிலான நூற்றாண்டு கால உறவு என்பது ஆழமான கலாசாரம், ஆன்மீகத்தோடு தொடர்புடையது. இந்தியா - தாய்லாந்து இடையே பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தோம் .
இந்தியாவும் தாய்லாந்தும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஆர்வமாக உள்ளன. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ராவும் நானும் விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், கப்பல் போக்குவரத்து, நிதி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் இரு நாடுகள் நெருக்கமாக பணியாற்றுவது குறித்து பேசினோம் என பதிவிட்டுள்ளார்.
English Summary
The century old relationship between Thailand is related to deep culture and spirituality Prime Minister Modi