இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!
MK Stalin letter to the Prime Minister to review the India and Sri Lanka agreement and recover Katchatheevu
அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும். நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கச்சத்தீவை மீட்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் மீட்டுக் கொண்டு வரவேண்டும். எனவும், கச்சத்தீவு மீட்பு தொடர்பாக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் நமது மீனவர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளதால், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தின் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
MK Stalin letter to the Prime Minister to review the India and Sri Lanka agreement and recover Katchatheevu