பெண் இறந்த விவகாரம்.. அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆஜர்.! - Seithipunal
Seithipunal


பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்இன்று காலை 11 மணிக்கு  சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில்  ஆஜர் ஆகியுள்ளார். இந்த விசாரணை 1 மணி நேரம் நடைபெறும் என கூறப்படுகிறது. 

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில்  கடந்த 5-ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக  சாதனை படைத்து வருகிறது. 

ஆனால்  கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் நடிகர் அல்லு அர்ஜுன் பார்க்கச் சென்றார் .அப்போது அவரை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்று ஐதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பினர்.
அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில்  ஆஜர் ஆகியுள்ளார். இந்த விசாரணை 1 மணி நேரம் நடைபெறும் என கூறப்படுகிறது. 

இதனிடையே உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்தார்.விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அல்லு அர்ஜுன் ஏற்கனவே கூறியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The womans deathAllu Arjun to appear before court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->