இதனால்தான் ஹாலிவுட் படங்களில் நடிக்கவில்லை - ஷாருக்கான் OPEN TALK! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான இவர்,  கடந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் படங்களில் நடித்ததன மூலம் இப்படங்கள்  மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களும் ரூ.1,000 கோடி வசூலித்தது.

மேலுக்கும், இது மட்டுமல்லாமல் இந்த படங்கள் உலகளாவிய பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லோகார்னோவில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா  நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்  ஷாருக்கானுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது ஹாலிவுட்டில் நடிக்காதது மற்றும் நடிப்பதற்கான வாய்ப்பு குறித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், இது உலகின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய சினிமா என நான் நினைக்கிறேன் என்றும், எனக்கு வழங்கப்படும் எந்தவொரு பாத்திரமும் இந்திய பார்வையாளர்களிடமிருந்து பெற்ற மகத்தான மரியாதை மற்றும் பாராட்டுக்கு "தகுதியாக" இருக்க வேண்டும் என்று கூறினார். அப்படி எந்த கதையும் வரவில்லை என்று தெரிவித்த அவர், இதனால் தான் ஹாலிவுட் படங்களில் நடிக்கவில்லை என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is why he is not acting in Hollywood films Shah Rukh Khan OPEN TALK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->