சத்யராஜ் நடிக்கும் ''தோழர் சேகுவேரா'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்!
Tholar Seguera Movie Release Update
90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் தமிழில் கதாநாயகன், வில்லன், நகைச்சுவை போன்ற ஏராளமானப் வேடங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் வசந்த் ரவியுடன் ''வெப்பன்'' படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரிட்டிஷ் அதிகாரியாக 'ஜாக்சன் துரை 2' திரைப்படத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.
இதை தொடர்ந்து அலெக்ஸ் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் 'தோழர் சேகுவேரா'. மேலும் இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பி.எஸ். அஸ்வின் இசையமைக்கும் திரைப்படத்தின் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார். இந்நிலையில் 'தோழர் சேகுவேரா' திரைப்படம் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Tholar Seguera Movie Release Update