மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள துணிவு படம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் தான் துணிவு. அதே போல் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகியது. 

இதுவும் ஜனவரி 11-ம்  தேதியான நேற்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் 2 திரைப்படங்களும் (ஜனவரி 11ம் தேதி) ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மலேசிய நாட்டில் துணிவு படம் ரிலீஸ் ஆகிய நிலையில் ஒரு தியேட்டரில் நடிகர் அஜித்குமாருக்கு 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட்டவுட் வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கட்டவுட் 9.144 மீட்டர் உள்ளது.

இது மலேசிய நாட்டில் ஒரு நடிகருக்கு வைக்கப்பட்டிருக்கும், மிக உயரமான பேனர் கட்டவுட் என தெரிவிக்கப்படுகிறது. இதனால், நடிகர் அஜித்துக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கட்டவுட் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu Movie In Malesia achievement book


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->