என்னது அது அஜித் இல்லையா... ஏமாற்றத்தை அனுபவித்த ரசிகர்கள்..!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் துணிவு. இந்த படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வினோத்துடன் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் இதுவே ஆகும்.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாள ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம்  அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று  தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, நேற்று சென்னை அண்ணா சாலை அருகே உள்ள எல்ஐசியில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரைக் காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அங்கு அசோக் லேலண்ட் வாகனத்தின் மீது முகமூடி அணிந்து கொண்டு நடிகர் அஜித்தும், அவர் அருகில் நடிகை மஞ்சு வாரியரும் அமர்ந்திருந்தனர். அந்த வாகனத்தின் கீழ் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால், படப்பிடிப்பு முடியும் வரை நடிகர் அஜித் தனது முகமூடியை கழட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முகமூடி அணிந்துகொண்டு வாகனத்தின் மீது அமர்ந்திருந்தவர் அஜித் இல்லை அவரை போன்ற டூப் என்பது தெரியவந்துள்ளது. 

படத்தில் வரும் சில சண்டைக் காட்சிக்காக அஜித் போல் டூப் போட்டு சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. அஜித் மட்டுமல்லாமல் அவர் அருகில் அமர்ந்து இருந்த மஞ்சு வாரியரும் டூப் என்பது தெரிய வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பையும், தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவையும் முடித்துக்கொண்டு இன்று காலை தான் சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

இந்நிலையில், அஜித்தை பார்ப்பதற்காக வந்து கால் கடுக்க நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thunivu movie shooting actor ajith not partcipate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->