நடிகர் அஜித்தின் 'துணிவு' படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் தெரியுமா.? .. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின்  போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்லா வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 22-ம் தேதி துணிவு படத்தின் டிரைலர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu movie trailer may release on December 22


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->