நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி மறைவு.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


கைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவரும் வைகைப்புயல் என அழைக்கப்படும் வடிவேலு மதுரையில் பிறந்தவர்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 1988ல் என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான வடிவேலு படிப்படியாக முன்னேறி தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென காலமானார். நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடிவேலுவின் தாயார் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தி குறிப்பில் 'நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி.சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். வைகைப்புயல் திரு.வடிவேலு அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin condolences to vadivelu mother passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->