'தக் லைஃப்' ஜிங்குச்சா பாடல் வெளியீடு: சிம்புவை புகழ்ந்த கமல் – “பாசத்தில் அவர் தந்தையையே மிஞ்சிவிட்டார்!” - Seithipunal
Seithipunal


மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் லிரிக் பாடல் ‘ஜிங்குச்சா’ இன்று வெளியானது.

இந்த இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், சிம்பு, மணிரத்னம், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தப் பாடலுக்கான வரிகளை கமல் ஹாசனே எழுதியிருக்கிறார் என்பது சிறப்பம்சமாகும். இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ளார்.

“கமல் சார் என் குரு!” – சிம்பு உருக்கம்

இந்த விழாவில் உரையாற்றிய சிம்பு,“கமல் சார் என் குரு. அவருடன் நடித்தது எனக்கு பெருமை. அவரிடம் இருந்து பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவருடன் நடிப்பது மிகவும் சவாலான விஷயம். அதே நேரத்தில், மணிரத்னம் சார் இருக்கிறார். இருவரும் சேர்ந்திருக்கும்போது எப்படி இருக்கும் பாருங்கள். இந்த படத்தில் கமல் சார் டான்ஸும் ஆடிவிட்டார். அந்த பாடல் எது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு தான் தெரிய வரும்” என மகிழ்ச்சியாகக் கூறினார்.

“சிம்பு, அவரது தந்தையையே மிஞ்சியிருக்கிறார்” – கமல் ஹாசன் உருக்கம்

அதற்குப் பதிலளித்த கமல் ஹாசன், சிம்புவைப் பற்றிய தனது பாசமிகு பாராட்டுக்களை பகிர்ந்தார்:

“இந்த படத்தில் சிம்பு அதிரடியான டான்ஸ் ஆடியிருக்கிறார். அவருக்கு ஈடாக நானும் ஆடவேண்டி வந்தது. சிம்பு பாசத்தில் அவரது அப்பா டி.ஆர்-ஐ மிஞ்சிவிட்டார். டி.ஆர் என்னைப் பார்த்தால் கண்ணீர் விட்டு அழுதுவிடுவார். அவர் கண்ணீர் விழும் போது என் சட்டை நனையுமே. அதே பாசத்தை இப்போது சிம்புவும் காட்டுகிறார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என உருக்கமாகக் கூறினார்.இதையெல்லாம் கேட்டபோது, அருகில் இருந்த சிம்பு தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

வெளியீட்டு தேதிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட உள்ளது. இந்த ரிப்போர்ட், படம் பற்றிய காத்திருப்பை மேலும் அதிகரித்துள்ளது. கமல்-சிம்பு கூட்டணியில் கேங்ஸ்டர் கதைக்களம், மணிரத்னத்தின் டைரக்ஷன், ரஹ்மானின் இசை – இவை அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thug Life Jingucha song release Kamal praises Simbu He has surpassed his father in affection


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->