விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் கார் - ஓட்டுநர் கைது.!!
actor babi simha car driver arrested for accident
சினிமா துறையில் பிரபல நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. இவர் பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் புஷ்பராஜ்.
இவர் பாபி சிம்ஹாவின் தந்தையை வீட்டில் விட்டுவிட்டு கிண்டி கத்திபாரா அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஒட்டி வந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 பேர் படுகாயமடைந்தனர். 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் விபத்தை ஏற்படுத்திய புஷ்பராஜிடன் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் புஷ்பராஜ் மதுபோதையில் வாகனம் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஓட்டுநர் புஷ்பராஜை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
English Summary
actor babi simha car driver arrested for accident