'மீனாட்சி சௌத்ரி' அடுத்து நடிக்கவிருக்கும் பிரபல நடிகரின் படம் எது தெரியுமா?
famous actors film Meenakshi Choudhary starring next
நடிகை 'மீனாட்சி சவுத்ரி', தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு, கடந்த ஆண்டு ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்', துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர், விஜய்யின் 'தி கோட்' , வருன் தேஜுடன் 'மட்கா' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'சங்கராந்திகி வஸ்துன்னம் ' படத்தில் நடித்திருந்த நிலையில், இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து, நவீன் பொலிஷெட்டியுடன் 'அனகனக ஓக ராஜு' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இந்த நிலையில், இவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அவ்வகையில், நாக சைதன்யாவின் 24-வது படத்தில் மீனாட்சி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினரால் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை கார்த்திக் தண்டு இயக்கவுள்ளார். மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் புஷ்பா பட இயக்குனரின் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிகின்றது.
English Summary
famous actors film Meenakshi Choudhary starring next