கடின உழைப்பின் மூலம் உச்சம் தொட்ட 6 நட்சத்திரங்கள்.! சினிமாவிற்கு முன் செய்த வேலை.!
top 6 actors of cinema industry and their work in early stages of career
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதான விஷயம் அப்படிக் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தி தங்களுடைய திறமையினால் வாழ்க்கையின் மிக உயர்ந்த இடத்தில் இன்று இருந்தாலும் தங்களது ஆரம்ப கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கிடைத்த வேலையை செய்து தங்களது கனவு மற்றும் லட்சியத்தை அடைந்திருக்கிறார்கள். அப்படி கடினமான உழைப்பின் மூலம் முன்னேறிய ஐந்து நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.
விஜய் சேதுபதி:
பீட்சா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானாலும் அதற்கு முன் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். இன்று தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருந்தாலும் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் மிகவும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். கிடைத்த சிறு வேலைகளை செய்து தன்னுடைய நாட்களை கடத்தியிருக்கிறார். மேலும் இரண்டு வருடங்கள் துபாய் சென்று அக்கவுண்டண்டாக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யோகி பாபு :
தமிழ் திரையுலகில் இன்று முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி யோகி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தவர். இவர் திரைப்பட வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னர் லேபர் வேலைகளை செய்து தன்னுடைய நாட்களை கடத்தியிருக்கிறார்.
சூரி:
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் திரைப்பட வாய்ப்பு தேடும் காலங்களில் பெயிண்டர் வேலைகள் செய்திருக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து சினிமாவில் வாய்ப்பு தேடிவுள்ளார்.
விதார்த்:
மைனா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் குற்றமே தண்டனை, மகளிர் மட்டும், அன்பறிவு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு தேடும் காலங்களில் கூத்து பட்டறையில் பணியாற்றியுள்ளார். அங்கு பணியாற்றும் போது நடிப்பின் நுணுக்கங்களை கற்று இருக்கிறார்.
ஜெயசூர்யா:
மலையாள சினிமாவில் கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் வருவதற்கு முன்னர் மிமிக்ரி கலைஞராக பணியாற்றியுள்ளார்.
சந்தானம்:
காமெடி நடிகராக இருந்து இன்று ஹீரோவாக முன்னேறி இருப்பவர் சந்தானம். சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் கிடைக்கின்ற சிறு சிறு வேலைகளை செய்து வந்திருக்கிறார். அதன் பிறகு லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
English Summary
top 6 actors of cinema industry and their work in early stages of career