விஜயின் லியோ படத்தால் லாபம் இல்லை - திருப்பூர் சுப்ரமணியம் பகீர்!
trippure subramniyan say LEO movie loss for theater owners
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தால் லாபம் இல்லை என்று, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருப்பது, விஜய் ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியான லியோ திரைப்படம், முதல் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த வசூல் இதுவரை வெளியான தமிழ்ப்படங்களில் அதி விரைவான வசூல் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ரூ.500 கோடி வசூலைக் கடந்து உள்ளதாகவும் தற்போது டிவிட்டரில் ட்ரண்ட் ஆகி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு நேர்காணலில், "லியோ படத்தால் தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. பங்கீட்டு தொகையாக 80 சதவீத்தை லலித்குமார் பெற்றுக்கொண்டார்" என் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளா, கர்நாடக மாநிலங்களில் 60 சதவீத பங்கீட்டு தொகையை வாங்கியவர்கள், தமிழகத்தில் மட்டும் அதிக பங்கீட்டு தொகையைப் பெற்று உள்ளதாகவும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் லியோ படத்தை வெளியிட்டிருந்தால் நியாமாக நடந்திருப்பார்கள் என்றும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி வரை வேறு பெரிய படம் இல்லை என்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்ட லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, கடுமையான ஒப்பந்தத்தை போட்டு, நெருக்கடி கொடுத்தாகவும், பல திரையரங்குகள் விருப்பமில்லாமல்தான் லியோ படத்தைத் திரையிட்டதாகவும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
லலித்குமார் போன்றவர்கள் இப்படி ஆதிக்கம் செலுத்தினால், தமிழ் சினிமாதுறை எப்படி இயங்கும். லியோவுடன் வேறு நல்ல படம் வெளியாகியிருந்தால், லியோவுக்கு இத்தனை திரையரங்கம் கிடைத்திருக்குமா என்றும் திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
trippure subramniyan say LEO movie loss for theater owners