சன்னி லியோனின் தமிழ் படத்தை சிறுவர்கள் அப்படி பார்க்கக் கூடாது.! - Seithipunal
Seithipunal


தமிழில் வெளியாகிய ஜெய்யின் வடகறி திரைப்படத்தில் கவர்ச்சி நடனமாடி இருப்பவர் தான் சன்னிலியோன். இந்த நிலையில், தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் சன்னி லியோன் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடித்திருக்கின்றார்.

"ஓ மை கோஸ்ட்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி தமிழகத்தின் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் சதீஷ், யோகி பாபு ,ரமேஷ் திலக் மற்றும் நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகை சன்னி லியோன் புடவையில் கலந்து கொண்டார். மேலும் அப்போது தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து சதீஷ் விமர்சித்தது கடும் கண்டனங்களை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதன் காரணமாக, இந்த திரைப்படத்திற்கு சிறுவர்கள் தனியே செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

U A Certificate for Sunny Leone o My Ghost Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->