வெந்து தணிந்தது காடு வெற்றி கொண்டாட்டம்.. சிம்புவுக்கு கார்.. கௌதம் மேனனுக்கு பைக் பரிசளித்த தயாரிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பஞ்சாப் மாடல் சித்தி இட்னானி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், அப்புகுட்டி உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்த படம் கடந்த செப்டம்பர் 15-ல் தியேட்டர்களில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெறா விட்டாலும், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சிம்புவின் பெஸ்ட் கம்பேக் இரண்டாவது முறையாக நிரூபித்துள்ளார் என ரசிகர்கள் படுகுஷியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு சொகுசு காரும் மற்றும் இயக்குநர் கவுதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக்கையும் பரிசாக வழங்கியுள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venthu thanithathu kaadu producer gift to simbu and Goutham Menon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->