வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? - கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 'ஹண்டர் வண்டார்' பாடலும் வெளியாகி வைரலானது. இதற்கிடையே, இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழு தெரிவித்தது. 

அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, நடிகர் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், நடிகை அபிராமி மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை வெளியிட்டது.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vettaiyan movie trailar date announce


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->