"விடாமுயற்சி" படப்பிடிப்பு தொடங்குகிறது! அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்! எகிறும் எதிர்பார்ப்பு!   - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமாரின் புதிய படமான விடா முயற்சி அறிவிப்பு வந்த பிறகு, முயற்சியே இல்லாமல் முடங்கி போனது. படப்பிடிப்பு தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. 

முன்னதாக இப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என தெரிவிக்கப்பட்டு பட வேலைகள் தொடங்கிய நிலையில், பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது. படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் இருக்கிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கும் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது. படம் தொடங்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்பொழுது இதுவரை படப்பிடிப்பு தொடங்காமல் இருக்க படத்தின் கதாநாயகனான அஜித் தான் காரணம் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. 

அவர் தற்போது தான் மோட்டார் சைக்கிளில் உலகம் சுற்றும் பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் பயணம் காரணமாகவே படப்பிடிப்பு நடக்கவில்லை என தெரிகிறது. தற்போது இந்தியா திரும்பி உள்ள நிலையில், விரைவில் விடாமுயற்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதன்படியே தற்பொழுது இயக்குனர் தரப்பிலும், தயாரிப்பாளர் தரப்பிலும் படப்பிடிப்புக்கு தயாராகவே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்த மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் படபிடிப்பானது தொடங்கும் எனவும் அதில் அஜித் குமார் கலந்து கொள்வார் எனவும் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. 

மேலும் படத்தில் நடிப்பவர்களுக்கான பட்டியல் முழுவதுமாக இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், பிக் பாஸ் புகழ் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முடங்கிக் கிடந்த விடாமுயற்சி, எழுந்து நிற்க முயற்சி செய்கிறது. விடாமுயற்சியுடன் "விடாமுயற்சி"யை கொண்டு வருவாரா இயக்குநர் மகிழ்திருமேனி என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vidamuyarchi shoots starts from next month in the UAE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->